Feeds:
Posts
Comments

Archive for February 26th, 2011

தோல்வி

தோல்வி கண்டு துயர் கொள்ளும் மானிடா நீ முயற்சி செய்ய மற்றுமொரு வாய்பளித்த இறைவனுக்கு நன்றி சொல்.   துணிந்தவனுக்கு மட்டுமே இமயம் தோள் உயரமாம்.   எனவே துணிந்து எழு நீ வெல்ல அந்த இமயம் என்ன இந்த உலகமே காத்திருக்கிறது.    

Read Full Post »

விழிகள்

*** நகரும் பேருந்தின் ஜன்னலோர சீட்டில் அமர்ந்து வானமிடும் தூறலை ரசிக்கும் அந்த விழிகள் *** காலைப் பனி என் காது குளிர நான் விழித்துப் பார்க்கையில் என் எதிர் வீட்டு வாசலில் கோலமிடும் உன் பட்டு விரல்கள் *** நான் எவ்வளவு முயன்றும் முகம் காட்ட மறுக்கும் முழு நிலவே ! என் நினைவில் பதிந்து போன உன் விழிகளையும் விரல்களையும் எப்படித் தொலைப்பேன் நான்.  

Read Full Post »

தூரம்

தூரமே நான் சென்றாலும் துணையாக நீ என் நினைவில் நீ பேசிய பல கதைகள் என் நினைவில் இல்லை. அந்த நொடிகளை மட்டும் சேகரித்து நடக்கிறேன். உன்  கை கோர்த்து நடக்கையில் மட்டும் தூரங்கள் தெரிவதில்லை,கனவில் கூட. உன் தோள் உரசும் நொடிகள் மட்டும் தோழமையும் மறந்து நேசிக்கிறேன்.

Read Full Post »

இன்னும் சில

எல்லோரும் ஆற்றில் பரிசலில் போனார்கள் நீ கை பிடித்து உள் அமர்த்தியதாலோ என்னவோ நான் மட்டும்  ஆறாகவே போனேன்.. —————————————————- நீ முத்தமிட்டு சிவந்த அவள் கன்னத்தை வெட்கமின்றி பார்த்தேன் இப்படித்தான் நானும் சிவந்திருப்பேனோ ? ———————————————————– நீ எந்த கல்மிஷமும் இல்லாமல் கைகுலுக்கி விடைபெற்றாய் நீ குலுக்கிய கையில் காதலை தேடிக் கொண்டே நின்றேன் நான் ..

Read Full Post »

Follow

Get every new post delivered to your Inbox.