Feeds:
Posts
Comments

தூக்கம்

தூங்காது இருக்கிறேன்

துணையாக நீ வந்த பின்

உன் தோள் சாய்ந்து

துயிலும் ஆசையில்

ஒரு நிமிடமேனும் நில்

உற்றுக்  கேள்

உன்னருகே அமர்ந்த என்

காதல் பேசும் மொழியை

உரக்க பேச முடியாது என்னால்

ஊமை பாஷை மட்டுமே பேசினாலும்

உண்மை காதலை சில நொடிகள்

நின்றேனும் கேள்..

கேளாது விட்டு விலகி நீ சென்றால்

மாளாது வேறேது செய்வேன் நான்..

மௌனம்

உன் மௌனம் தந்த

வலியை ஒப்பிடுகையில்

மரணம் வலிக்காதோ

என்று தோன்றியது

நான் உன்னை சந்திக்கும் கடைசி இரவு ,

மீண்டும் பார்போமா என உறுதியில்லாத பொழுது

இரவு நேர நிசப்தம்.

உன்னோடு வண்டியில் பின்புறம் நான்.

உன் தோளை பற்றிக் கொள்ள துடிக்கும் என் கரங்கள்.

பல நூறு வார்த்தைகள் உன்னோடு பேச துடித்தும் பேச முடியாமல் நான்.

கடைசி நிமிடம் வரை நினைத்தேன்

ஒரு முறையேனும் என் காதலை சொல்லி உன்னை கட்டியணைக்க.

நீ வேறொருவள் நினைவோடு பயனிக்கையில்

உன் அருகில் அமர்ந்த என் காதலால் கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.

உனக்கான என் முத்தங்கள் காற்றை மட்டுமே தடவுகின்றன உன் இதழ்கள் கிடைக்காததால்….

உன் தலை கோதி விளையாட அந்த

தென்றல் மட்டும் அல்ல

நானும் தான் உன்னருகே தவிப்போடும் தயக்கத்தோடும்…

தோல்வி

தோல்வி கண்டு

துயர் கொள்ளும் மானிடா

நீ முயற்சி செய்ய

மற்றுமொரு வாய்பளித்த

இறைவனுக்கு நன்றி சொல்.

 

துணிந்தவனுக்கு மட்டுமே

இமயம் தோள் உயரமாம்.

 

எனவே துணிந்து எழு

நீ வெல்ல அந்த

இமயம் என்ன

இந்த உலகமே

காத்திருக்கிறது.

 

 

விழிகள்

***

நகரும் பேருந்தின்

ஜன்னலோர சீட்டில்

அமர்ந்து வானமிடும்

தூறலை ரசிக்கும்

அந்த விழிகள்

***

காலைப் பனி என்

காது குளிர நான்

விழித்துப் பார்க்கையில்

என் எதிர் வீட்டு வாசலில்

கோலமிடும் உன் பட்டு

விரல்கள்

***

நான் எவ்வளவு முயன்றும்

முகம் காட்ட மறுக்கும்

முழு நிலவே !

என் நினைவில் பதிந்து போன

உன் விழிகளையும் விரல்களையும்

எப்படித் தொலைப்பேன் நான்.

 

தூரம்

தூரமே நான் சென்றாலும்

துணையாக நீ என் நினைவில்

நீ பேசிய பல கதைகள் என் நினைவில் இல்லை.

அந்த நொடிகளை மட்டும் சேகரித்து நடக்கிறேன்.

உன்  கை கோர்த்து நடக்கையில் மட்டும்

தூரங்கள் தெரிவதில்லை,கனவில் கூட.

உன் தோள் உரசும் நொடிகள் மட்டும்

தோழமையும் மறந்து நேசிக்கிறேன்.

எல்லோரும் ஆற்றில்

பரிசலில் போனார்கள்

நீ கை பிடித்து உள்

அமர்த்தியதாலோ என்னவோ

நான் மட்டும்  ஆறாகவே போனேன்..

—————————————————-

நீ முத்தமிட்டு சிவந்த

அவள் கன்னத்தை

வெட்கமின்றி பார்த்தேன்

இப்படித்தான் நானும் சிவந்திருப்பேனோ ?

———————————————————–

நீ எந்த கல்மிஷமும் இல்லாமல்

கைகுலுக்கி விடைபெற்றாய்

நீ குலுக்கிய கையில்

காதலை தேடிக் கொண்டே

நின்றேன் நான் ..

கனவான கனவுகள்

மறக்காத வலிகள்

உறங்காத இரவுகள்

உறைந்த நினைவுகளாய்

உயிர் போகும் வரை……..

Older Posts »

Follow

Get every new post delivered to your Inbox.